/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
அன்னயோஜனா ரேஷன் கார்டுக்கு விரல் ரேகை பதிவு அவசியம்
/
அன்னயோஜனா ரேஷன் கார்டுக்கு விரல் ரேகை பதிவு அவசியம்
அன்னயோஜனா ரேஷன் கார்டுக்கு விரல் ரேகை பதிவு அவசியம்
அன்னயோஜனா ரேஷன் கார்டுக்கு விரல் ரேகை பதிவு அவசியம்
ADDED : மார் 09, 2025 03:37 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம் : அந்தியோதயா அன்னயோஜனா மற்றும் முன்னுரிமை திட்ட ரேஷன் கார்டு குடும்ப உறுப்பினர்கள் விரல் ரேகை பதிவு செய்திட வேண்டும்.
கலெக்டர் ஷேக் அப்துல் ரஹ்மான் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
விழுப்புரம் மாவட்டத்தில் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் அத்தியாவசிய பொருட்கள் பெறும் அந்தியோதயா அன்னயோஜனா மற்றும் முன்னுரிமை ரேஷன் கார்டுதாரர்கள், தங்கள் கார்டில் உள்ள குடும்ப உறுப்பினர்களின் விரல் ரேகையினை வரும் 25ம் தேதிக்குள், ரேஷன் கடையில், பி.ஓ.எஸ்., இயந்திரத்தின் மூலம் கட்டாயம் பதிவு செய்திட வேண்டும்.
இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.