/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
கண்டமங்கலம் அருகே தீ விபத்து அ.தி.மு.க., நிவாரணம் வழங்கல்
/
கண்டமங்கலம் அருகே தீ விபத்து அ.தி.மு.க., நிவாரணம் வழங்கல்
கண்டமங்கலம் அருகே தீ விபத்து அ.தி.மு.க., நிவாரணம் வழங்கல்
கண்டமங்கலம் அருகே தீ விபத்து அ.தி.மு.க., நிவாரணம் வழங்கல்
ADDED : மார் 01, 2025 04:43 AM

கண்டமங்கலம்: கண்டமங்கலம் அருகே தீ விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு அ.தி.மு.க., சார்பில் நிவாரணம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
கண்டமங்கலம் அடுத்த கொங்கம்பட்டு ஊராட்சிக்குட்பட்ட சொக்கம்பட்டில் கடந்த 24ம் தேதி ஏற்பட்ட தீ விபத்தில் வெற்றிவேல் என்பவரின் கூரை வீடு முற்றிலும் எரிந்து சேதமானது.
பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு கண்டமங்கலம் தெற்கு ஒன்றிய செயலாளர் ராமதாஸ் தனது சொந்த செலவில் அரிசி, காய்கறி, வேட்டி, சேலை, பாய், தலையணை மற்றும் ரொக்கப் பணம் வழங்கி, ஆறுதல் கூறினார்.
ஒன்றிய அவைத்தலைவர் ஏழுமலை, மாவட்ட பிரதிநிதி சேகர், பாசறை துணைத் தலைவர் சுமன்ராஜ், பாக்கம் ஊராட்சி தலைவர் கல்யாணிவேலு, கிளைச் செயலாளர் குமரகுரு ஆகியோர் உடனிருந்தனர்.