/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
ஆடி கிருத்திகை விழா கொடியேற்றம்
/
ஆடி கிருத்திகை விழா கொடியேற்றம்
ADDED : ஜூலை 22, 2024 01:36 AM

செஞ்சி : செஞ்சி 'பி' ஏரிக்கரை சுப்ரமணியர் கோவிலில் ஆடி கிருத்திகை திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது.
இக்கோவிலில், ஆடி கிருத்திகை விழா வரும் 29ம் தேதி நடக்கிறது. அதனையொட்டி, நேற்று காலை 6:00 மணிக்கு வள்ளி, தெய்வானை சமேத சுப்ரமணியருக்கு சிறப்பு அபிஷேக, அங்காரம் நடந்தது. 9:00 மணிக்கு கொடியேற்றம் நடந்தது.
வரும் 29ம் தேதி ஆடி கிருத்திகை அன்று காலை 6:00 மணிக்கு 108 திரவிய அபிஷேகமும், எம்.ஜி.ஆர்., நகர் மகாமாரியம்மன் கோவிலில் இருந்து 108 பால் குட ஊர்வலமும், 100 கிலோ எடை உள்ள சக்திவேலுக்கு 108 திரவிய அபிஷேகமும், பக்தர்களுக்கு மிளகாய் பொடி அபிஷேகம், செடல் சுற்றுதல், மழுவேந்தல், தீமித்தல், தேர் இழுத்தல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது.
விழா ஏற்பாடுகளை செஞ்சி மார்க்கெட் கமிட்டி நெல், அரிசி, வேர்க்கடலை வியாபாரிகள் மற்றும் எடை பணி தொழிலாளர்கள், விழா குழுவினர் செய்து வருகின்றனர்.