/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
பறக்கும் படை சோதனை ரூ.71 ஆயிரம் பறிமுதல்
/
பறக்கும் படை சோதனை ரூ.71 ஆயிரம் பறிமுதல்
ADDED : மார் 26, 2024 04:39 AM

மயிலம்: மயிலம் அருகே உரிய ஆவணமின்றி கொண்டு செல்லப்பட்ட 71 ஆயிரத்து 700 ரூபாயை பறக்கும் படையிடனர் பறிமுதல் செய்தனர்.
மயிலம் அடுத்த மேல் ஒலக்கூர், மதுரா கடுகப்பட்டு கிராமத்தில் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் முருகன் தலைமையிலான தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக பைக்கில் வந்த திருவண்ணாமலை மாவட்டம், கன்னிகாபுரத்தைச் சேர்ந்த நாகலிங்கம் மகன் வினோத், 40;ஆவணமின்றி கொண்டு வந்த 71 ஆயிரத்து 700 ரூபாயை பறிமுதல் செய்து, மயிலம் பி.டி.ஓ., அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் உதவி அலுவலர் முகுந்தனிடம் ஒப்படைத்தனர்.
திண்டிவனம் தாசில்தார் சிவா ஆலோசனையின் பேரில் திண்டிவனம் சார் கருவூலத்தில் பணம் ஒப்படைக்கப்பட்டது.

