/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
'மாஜி' முதல்வர் பிறந்தநாள் விழா மர்மம் விழுப்புரம் அ.தி.மு.க.,வினர் 'அப்செட்' :அ.ம.மு.க., - ஓ.பி.எஸ்., தரப்புக்கு சாதகமாகுமா?

ADDED : மே 14, 2024 05:58 AM
விழுப்புரம் மாவட்டத்தில், அ.தி.மு.க., பொதுச் செயலாளர் பழனிசாமி பிறந்த நாள் விழாவை கட்சி நிர்வாகிகள் அவ்வளவாக கொண்டாடாதது, அ.ம.மு.க., - ஓ.பி.எஸ்., தரப்புக்கு சாதகமாக அமையும் என அக்கட்சியினர் தெரிவிக்கின்றனர்.
அ.தி.மு.க., பொதுச்செயலாளர் பழனிசாமியின் 70வது பிறந்த நாள் விழா நேற்று முன்தினம் கொண்டாடப்பட்டது. பல்வேறு மாவட்டங்களில், அ.தி.மு.க.,வினர் கேக் வெட்டியும், நலத்திட்ட உதவிகளை வழங்கியும் கொண்டாடினர்.
ஆனால், விழுப்புரம் மாவட்டத்தில் கட்சியினர் யாரும் அவ்வளவாக ஆர்வம் காட்டாததால் பெரும்பாலான இடங்களில் பிறந்தநாள் விழா கொண்டாட்டம் நடைபெறவில்லை.
எம்.எல்.ஏ., - எம்.பி.,க்கள் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் தரப்பினர் சார்பில் பெயரளவில் கூட கொண்டாடவில்லை,
நலத்திட்ட உதவிகள் போன்ற நிகழ்ச்சிகளும் நடக்கவில்லை என, விழுப்புரம் மாவட்ட அ.தி.மு.க., தொண்டர்கள் கவலையடைந்துள்ளனர்.
இது குறித்து, அவர்களிடம் கேட்டபோது, 'அ.தி.மு.க.,வில் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா போன்ற ஆளுமை மிக்க தலைவர்களின் பிறந்த நாள் மற்றும் நினைவு நாளில் மாவட்டம் முழுதும் பெரிய அளவில் நலத்திட்ட உதவிகள் வழங்குவது, மரியாதை செலுத்துவது இன்னமும் தொடர்கிறது.
இதே போல், பொதுச்செயலாளர் பழனிசாமியின் பிறந்த நாளும் கடந்த ஆண்டுகளில் சிறப்பாக கொண்டாடப்பட்டது.
ஆனால், இந்தாண்டு மாவட்ட முழுவதும் பெரிதாக கொண்டாடப்படவில்லை. இதற்கு, மாவட்ட முக்கிய நிர்வாகிகள் தரப்பிலிருந்து, கொண்டாடுவதற்கான எவ்வித அனுமதியும், தகவலும் தெரிவிக்கப்படவில்லை. இதனால், கட்சி நிர்வாகிகள் பொதுச் செயலாளர் பிறந்த நாளைக் கொண்டாடவில்லை. இதற்கு சரியான காரணம் தெரியவில்லை. விழுப்புரத்தில் நகர செயலாளர் பசுபதி தலைமையில் மட்டும் நடந்தது.
எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவிற்கு பிறகு, பல்வேறு சோதனைகளைக் கடந்து, அ.தி.மு.க.,வை மீட்டெடுத்தது பழனிசாமி. அவரது பிறந்த நாள், பிற மாவட்டங்களில் கொண்டாடப்பட்ட நிலையில், விழுப்புரத்தில் எளிமையாக கூட நிகழ்ச்சிகள் நடத்தாதது வேதனை தருகிறது. இது, அ.ம.மு.க., - ஓ.பி.எஸ்., தரப்புக்கு சாதகமாகும்' என்றனர்.
-நமது நிருபர்-