/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
மாஜி கவுன்சிலர் மகன் துாக்கிட்டு தற்கொலை
/
மாஜி கவுன்சிலர் மகன் துாக்கிட்டு தற்கொலை
ADDED : ஆக 11, 2024 05:48 AM

திண்டிவனம் : திண்டிவனத்தில் அ.தி.மு.க., முன்னாள் கவுன்சிலர் மகன் துாக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
திண்டிவனம் கிடங்கல் (2) பகுதியைச் சேர்ந்தவர் சேட்டு. அ.தி.மு.க., முன்னாள் கவுன்சிலர். இவரது மகன் வினோத், 30; திண்டிவனம் ரயில் நிலையம் செல்லும் வழியில் ஸ்டுடியோ வைத்துள்ளார். திருமணமானவர்.
நேற்று முன்தினம் காலை வீட்டிலிருந்து ஸ்டுடியோவிற்கு சென்றவர் வீடு திரும்பவில்லை.
மாலை அவரது நண்பர்கள் ஸ்டுடியோவிற்கு சென்று பார்த்தபோது, உள்பக்கம் பூட்டியிருந்ததால், சந்தேகமடைந்து, கதவை உடைத்து பார்த்தனர். உள்ளே வினோத் துாக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.
திண்டிவனம் டவுன் போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணை நடத்தினர். அதில் வினோத், தொழில் விஷயமாக அதிக அளவில் கந்து வட்டிக்கு கடன் வாங்கியதாகவும், கடன் கொடுத்தவர்களின் நெருக்கடி தாங்காமல் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.
இதுகுறித்து வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.