/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
நண்பனை கொலை செய்வதை வேடிக்கை பார்த்த மூவர் உட்பட 4 பேர் கைது
/
நண்பனை கொலை செய்வதை வேடிக்கை பார்த்த மூவர் உட்பட 4 பேர் கைது
நண்பனை கொலை செய்வதை வேடிக்கை பார்த்த மூவர் உட்பட 4 பேர் கைது
நண்பனை கொலை செய்வதை வேடிக்கை பார்த்த மூவர் உட்பட 4 பேர் கைது
ADDED : பிப் 22, 2025 01:39 AM
மரக்காணம்: குடி போதையில் நண்பனை கொலை செய்த நபர் உள்ளிட்ட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
மரக்காணம் அடுத்த கந்தாடு கிராமத்தில் முட்புதாரில் வெட்டு காயங்களுடன் கிடந்த ஆண் சடலத்தை நேற்று முன்தினம் போலீசார் மீட்டு விசாரணை நடத்தினர்.
அதில், செங்கல்பட்டு மாவட்டம், வெள்ளகொண்ட அகரத்தைச் சேர்ந்த ஜெயபால் மகன் ஜெயசீலன்,40; இவரது நண்பர் மரக்காணம் அடுத்த பிளாரிமேட்டைச் சேர்ந்த எட்டியான் மகன் கரண்குமார்,26; என்பவருடன் கடந்த 19ம் தேதி மாலை மது அருந்திய போது ஏற்பட்ட தகாறில் ஜெயசீலனை, கரண்குமார் வெட்டி கொலை செய்தது தெரியவந்தது.
இதனையெடுத்து நேற்று முன்தினம் கரண்குமாரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தியதில் தெரியவந்ததாவது:
கடந்த 19ம் தேதி காலை 11:00 மணிக்கு ஜெயசீலன் புதுச்சேரியில் இருந்து மது வாங்கி வந்தார். பின்னர் கரண்குமார், மரக்காணம் சம்புவெளி தெரு வேலு மகன் சீத்தாராமன், 22; நகரான் தெரு பெரியதம்பி மகன் கீர்த்திஸ்வரன், 23; கந்தாடு காமராஜ் மகன் பரணிதரன், 20; ஆகிய 5 பேரும் ஒன்றாக மது அருந்தினர்.
அப்போது ஜெயசீலன், கரண்குமாரிடம் கந்தாடு கதிரவன், 'உன்னை கொலை செய்ய போகிறான்' என கூறியுள்ளார். அதற்கு கரண்குமார், 'நான் உன்னை கொலை செய்து விடுவேன்' என கூறினார். அதில், இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. , ஜெயசீலன், கரண்குமாரை கத்தியால் வெட்ட முயன்றபோது, கரண்குமார் கத்தியை பிடுங்கி ஜெயசீலனை வெட்டி கொலை செய்துள்ளார். அதனை, சீத்தாராமன், கீர்த்திஸ்வரன், பரணிதரன் ஆகியோர் தகராறை விலக்கி விடாமல் வேடிக்கை பார்த்ததோடு, போலீசாருக்கு தகவலை தெரிவிக்காமல், தலைமறைவானது தெரிய வந்தது.
அதன்பேரில், சீத்தாராமன், கீர்த்திஸ்வரன், பரணிதரன் ஆகியோரை கைது செய்தனர்.

