/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
வெங்கட்ரமணர் கோவிலில் நாலாயிர திவ்ய பிரபந்தம்
/
வெங்கட்ரமணர் கோவிலில் நாலாயிர திவ்ய பிரபந்தம்
ADDED : ஆக 04, 2024 11:39 PM

செஞ்சி: செஞ்சி கோட்டை வெங்கட்ரமணர் கோவிலில் நாலாயிர திவ்ய பிரபந்த பாசுரம் படிக்கும் நிகழ்ச்சி நிறைவு விழா நடந்தது.
கோவிலில் நாலாயிர திவ்விய பிரபந்த பாசுரம் படிக்கும் நிகழ்ச்சி கடந்த மாதம் 27ம் தேதி துவங்கியது.
சுதர்சனம் பாகவதர் தலைமையில் தினமும் 200க்கும் மேற்பட்ட பாகவதர்கள், ஆண்டாள் கோஷ்டியினர் நாலாயிர திவ்ய பிரபந்த பாசுரங்களை படித்து வந்தனர். இதன் நிறைவு நிகழ்ச்சி நேற்று நடந்தது.
அதனையொட்டி, ஸ்ரீதேவி, பூதேவி சமேத வெங்கட்ரமணருக்கு திருமஞ்சனமும், சிறப்பு அலங்காரமும் நடந்தது. பாகவதர்கள், ஆண்டாள் கோஷ்டியினர்கள் கவுரவிக்கப்பட்டனர்.
இந்நிகழ்ச்சிக்கு ஸ்ரீரங்கபூபதி கல்வி அறக்கட்டளை தலைவர் ரங்கபூபதி தலைமை தாங்கினார். ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் வைகை தமிழ்செல்வன் முன்னிலை வகித்தார். திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.