/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
மின்சாரம் பாய்ந்து நரிக்குறவர் பலி
/
மின்சாரம் பாய்ந்து நரிக்குறவர் பலி
ADDED : செப் 04, 2024 11:05 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
செஞ்சி: வீட்டில் மின் ஒயர்களை பழுது பார்த்த நரிக்குறவர் மின்சாரம் பாய்ந்து இறந்தார்.
செஞ்சி அடுத்த களையூர் நரிக்குறவர் குடியிருப்பை சேர்ந்தவர் காந்தி மகன் ஏழுமலை 28; நரிக்குறவர். இவர் நேற்று காலை 12 மணியளவில் தனது வீட்டில் மின் ஒயர்களை பழுது பார்த்து கொண்டிருந்தார்.
அப்போது எதிர்பாராத விதமாக அவர் மீது மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே இறந்தார்.
இது குறித்து செஞ்சி போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.