/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
பரிசு விழுந்ததாக கூறி மாணவரிடம் ஒரு லட்சம் ரூபாய் மோசடி
/
பரிசு விழுந்ததாக கூறி மாணவரிடம் ஒரு லட்சம் ரூபாய் மோசடி
பரிசு விழுந்ததாக கூறி மாணவரிடம் ஒரு லட்சம் ரூபாய் மோசடி
பரிசு விழுந்ததாக கூறி மாணவரிடம் ஒரு லட்சம் ரூபாய் மோசடி
ADDED : ஜூலை 09, 2024 04:01 AM
விழுப்புரம், : விழுப்புரம் அடுத்த நத்தமேடு கிராமத்தைச் சேர்ந்தவர் வேலு மகன் சந்துரு, 20; கல்லுாரி மாணவர்.
இவரை கடந்த ஜூன் 29ம் தேதி மொபைல் போனில் தொடர்பு கொண்ட மர்ம நபர் ஒருவர், பிலிப்கார்ட் பரிசு குலுக்கலில் உங்களுக்கு ரூ.12.50 லட்சம் ரூபாய் விழுந்துள்ளது. பணத்தைப் பெற பிராசசிங் கட்டணம், டெலிவரி கட்டணம், ஜி.எஸ்.டி., ஆகியவற்றிற்காக பணம் செலுத்த வேண்டும் என தெரிவித்துள்ளார்.
அதை நம்பிய சந்துரு, ஒரு லட்சத்து 800 ரூபாயை மர்ம நபர் கூறிய வங்கி கணக்கிற்கு அனுப்பியுள்ளார். பின்னர், பரிசுத்தொகை வராதது குறித்து சந்துரு கேட்டபோது, மேலும் பணம் செலுத்த வேண்டும் என கூறியவர் அதன் பிறகு தொடர்பை துண்டித்துள்ளார்.
இதனால், தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த சந்துரு, நேற்று விழுப்புரம் சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப் பதிந்து மர்ம நபரை தேடி வருகின்றனர்.