ADDED : மார் 10, 2025 05:51 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வானுார்: புதுச்சேரி ஜோதி கண் மருத்துவமனை சார்பில், திருவக்கரை கிராமத்தில் இலவச கண் சிகிச்சை முகாம் நடந்தது.
விழுப்புரம் மாவட்ட கிரஷர், கல்குவாரி மற்றும் எம்.சாண்ட் உரிமையாளர்கள் நலச்சங்கம், ரோட்டரி கிளப் ஆப் பாண்டிச்சேரி மற்றும் புதுச்சேரி ஜோதி கண் மருத்துவமனை சார்பில் திருவக்கரை அரசு உயர்நிலைப் பள்ளி வளாகத்தில் நடந்த முகாமிற்கு, டாக்டர் சரண்யா தலைமையில் மருத்துவக்குழுவினர், பொது மக்களுக்கு சிகிச்சை அளித்தனர்.
நிகழ்ச்சியில், ரோட்டரி கிளப் செயலாளர் பாலசுப்ரமணியன், தலைவர் ஸ்ரீதர், சங்க தலைவர் கோபாலகிருஷ்ணன் உட்பட பலர் பங்கேற்றனர்.