/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
கிரீன் பாரடைஸ் பள்ளியில் புதியவர்கள் தின விழா
/
கிரீன் பாரடைஸ் பள்ளியில் புதியவர்கள் தின விழா
ADDED : ஜூன் 19, 2024 11:12 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டிவனம் : திண்டிவனம் அடுத்த ரெட்டணை கிரீன் பாரடைஸ் சி.பி.எஸ்.இ., மேல்நிலைப்பள்ளியில் மழலையர் வகுப்புகள் தொடங்கப்பட்டு 'புதியவர்கள் தினம்' கொண்டாடப்பட்டது.
இப்பள்ளியில் கேஜி., மாணவர்களுக்கான கல்வி ஆண்டு நேற்று தொடங்கப்பட்டது. பெற்றோர்களுடன் வந்திருந்த மழலையர்களை தாளாளர் சண்முகம் வரவேற்றார். குழந்தைகள் வளர்ப்புக்கான முக்கிய அம்சங்களை, பள்ளி முதன்மை இயக்குனர் வனஜா சண்முகம் எடுத்துரைத்தார்.
செயலாளர் சந்தோஷ், நிர்வாக இயக்குனர் கார்த்திகேயன் சண்முகம் ஆகியோர் வாழ்த்து மடல் மற்றும் இனிப்புகளை வழங்கி மாணவர்களை வகுப்பிற்கு வரவேற்றனர். பள்ளி முதல்வர் லட்சுமி நன்றி கூறினார்.