/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
விநாயகர் சதுர்த்தி விழா ஆலோசனை கூட்டம்
/
விநாயகர் சதுர்த்தி விழா ஆலோசனை கூட்டம்
ADDED : ஆக 28, 2024 03:55 AM
விழுப்புரம், : விநாயகர் சதுர்த்தியையொட்டி, விநாயகர் சிலை அமைத்தல் மற்றும் ஊர்வலமாக கொண்டு சென்று நீர்நிலைகளில் கரைப்பது குறித்த அரசு விதிமுறை தொடர்பான ஆலோசனைக் கூட்டம், காணையில் நடந்தது.
சப் இன்ஸ்பெக்டர் அன்பழகன் தலைமை தாங்கினார். சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் கருணாநிதி முன்னிலை வகித்தார். விநாயகர் சிலைகளை வைத்து வழிபடுவோர் பங்கேற்றனர்.
கூட்டத்தில், விநாயகர் சதுர்த்தியையொட்டி, சிலைகள் வைப்பதற்கும், ஊர்வலமாக கொண்டு சென்று கரைப்பதில் அரசின் விதிமுறைகளை பின்பற்ற வேண்டும்.
முன்னதாக, சிலை வைப்பதற்கு போலீசாரின் அனுமதி பெற வேண்டும்.
இயற்கைக்கு பாதிப்பில்லாத சிலைகளை வைப்பதோடு, 10 அடிக்கு மேல் உயரமான சிலையை நிறுவுதல் கூடாது.
மசூதி, தேவாலயங்கள் அருகே சிலை வைக்க அனுமதியில்லை என்பது உட்பட பல்வேறு அரசின் விதிமுறைகள் பற்றி போலீசார் அறிவுறுத்தினர்.