/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
விநாயகர் சதுர்த்தி விழா ஆலோசனைக் கூட்டம்
/
விநாயகர் சதுர்த்தி விழா ஆலோசனைக் கூட்டம்
ADDED : ஆக 29, 2024 11:42 PM
விழுப்புரம்:விழுப்புரம் மாவட்டத்தில், காவல் துறை சார்பில், விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விநாயகர் சிலை வைப்பதற்கு கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் மற்றும் வழிமுறைகள் தொடர்பான கூட்டம் விழுப்புரத்தில் நடந்தது.
கூட்டத்திற்கு, டி.எஸ்.பி., சுரேஷ் தலைமை தாங்கி ஆலோசனை வழங்கினார்.
விழுப்புரம் மேற்கு இன்ஸ்பெக்டர் கல்பனா, அரகண்டநல்லுார்ர் இன்ஸ்பெக்டர் ஷாகுல்ஹமீது, விக்கிரவாண்டி இன்ஸ்பெக்டர் பாண்டியன், திருவெண்ணைநல்லுார் இன்ஸ்பெக்டர் மைக்கேல்இருதயராஜ் மற்றும் சப் இன்ஸ்பெக்டர்கள் மற்றும் இந்து முன்னணி உள்ளிட்ட அமைப்புகளைச் சேர்ந்த பலர் பங்கேற்றனர்.
கூட்டத்தில், புதிதாக விநாயகர் சிலை நிறுவுவதற்கு அனுமதி இல்லை என்றும், ஏற்கனவே விநாயகர் சிலை வைத்த இடங்களில் மீண்டும் வைத்துக் கொள்ளலாம்.
விநாயகர் சிலை வைக்கும் இடங்களில், பாதுகாப்புக்காக கூரைகள் அமைக்காமல் ரூப் அல்லது சிமென்ட் ஷீட் போன்றவைகள் அமைத்து வைக்க வேண்டும். சிலை வைக்கும் இடங்களில் முறையாக அனுமதி பெற்று மின்சாரம் பயன்படுத்த வேண்டும்.
தீ தடுப்பு வழிமுறைகளை பின்பற்றவும், சிலை வைக்கும் இடங்களில் சுழற்சி முறையில் நிர்வாகிகள் பாதுகாப்புக்கு இருக்கவும் அறிவுறுத்தப்பட்டது.

