/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
விநாயகர் சதுர்த்தி சிலை வழிபாடு: விதிகளை பின்பற்ற கலெக்டர் அறிவுரை
/
விநாயகர் சதுர்த்தி சிலை வழிபாடு: விதிகளை பின்பற்ற கலெக்டர் அறிவுரை
விநாயகர் சதுர்த்தி சிலை வழிபாடு: விதிகளை பின்பற்ற கலெக்டர் அறிவுரை
விநாயகர் சதுர்த்தி சிலை வழிபாடு: விதிகளை பின்பற்ற கலெக்டர் அறிவுரை
ADDED : ஆக 31, 2024 03:12 AM

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில், விநாயகர் சதுர்த்தி விழா முன்னேற்பாடு பணிகள் குறித்து அனைத்துத்துறை அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் விழுப்புரத்தில் நடந்தது.
கலெக்டர் பழனி தலைமை தாங்கி பேசியதாவது:
விநாயகர் சிலை நிறுவுவோர் தடையின்மை சான்றும், இடத்துக்கான அனுமதியும் பெற வேண்டும், காவல் நிலையத்தில் ஒலிப்பெருக்கி அனுமதியும், மின்துறை, தீயணைப்பு துறை சான்று பெற வேண்டும். ஆர்.டி.ஓ., பரிசீலனை செய்து அனுமதி வழங்கப்படும்.
சிலைகள் துாய களிமண்ணால் செய்யப்பட்டிருக்க வேண்டும். ரசாயன வர்ணம் பூசிய விநாயகர் சிலைகளை கண்டிப்பாக பயன்படுத்தக் கூடாது.
நீரில் கரையக் கூடிய மற்றும் நச்சுத்தன்மையற்ற இயற்கை சாயங்களை பயன்படுத்த வேண்டும். எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களைக் கொண்டு தற்காலிக கொட்டகைகள் ஏற்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும்.
சிலையின் உயரம் 10 அடிக்கு மிகாமல் இருக்க வேண்டும். இதர வழிபாட்டுத் தலங்கள், மருத்துவமனைகள், கல்வி நிலையங்கள் அருகே சிலைகள் நிறுவுவதை தவிர்க்க வேண்டும். கூம்பு வடிவ ஒலிப்பெருக்கிகள் பயன்படுத்தக் கூடாது.
சிலை பாதுகாப்பிற்காக இரண்டு நபரை 24 மணிநேரமும் பணியில் அமர்த்த வேண்டும். ஜாதீய வெறுப்புகளை துாண்டக்கூடிய முழக்கங்களை எழுப்பக்கூடாது, சிலைகள் நிறுவப்பட்ட இடங்கள், கரைக்கப்படும் இடங்கள், நிர்ணயிக்கப்பட்ட கடற்கரை பகுதி, குளம் வீடூர் அணை பகுதிகளில் மட்டுமே கரைத்திட வேண்டும்.
சிலை ஊர்வலத்தின்போது சட்டம் ஒழுங்கு பாதிப்பு ஏற்படும் வகையில் செயல்பட்டால், வழக்குப் பதிந்து நடவடிக்கை எடுக்கப்படும். விநாயகர் சதுர்த்தி விழாவினை பிரச்னையின்றி அமைதியாக நடத்திட வேண்டும். இவ்வாறு கலெக்டர் பேசினார்.
டி.ஆர்.ஓ., பரமேஸ்வரி, கூடுதல் எஸ்.பி., திருமால் மற்றும் முக்கிய துறை சார்ந்த அலுவலர்கள் பங்கேற்றனர்.