
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வானுார்: ஆரோவில் கிராம செயல்வழிக்குழுவும், புதுச்சேரி பிம்ஸ் மருத்துவமனையும் இணைந்து ஏற்பாடு செய்திருந்த இலவச மருத்துவ முகாம் கோட்டக்கரை காலனியில் நடந்தது.
ஊராட்சி தலைவர் வசந்தி கபாலி, ஆரோவில் கிராம செயல்வழிக்குழு திட்ட இயக்குனர் ஜெரால்டு மோரீஸ் ஆகியோர் துவக்கி வைத்தனர். பிம்ஸ் மருத்துவக்குழுவினர் சிகிச்சை மற்றும் ஆலோசனைகள் வழங்கினர்.
இதில் நுாற்றுக்கும் மேற்பட்ட பொது மக்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.
நேற்று துவங்கிய இந்த மருத்துவ முகாம் ஒவ்வொரு திங்கட்கிழமையும் கோட்டக்கரை கிராமத்தில், மாலை 5:00 மணி முதல் 7:00 மணி வரை நடக்கிறது.
நிகழ்ச்சியில் பிம்ஸ் மருத்துவமனையின் முகாம் ஒருங்கிணைப்பாளர் துரைசாமி, வார்டு உறுப்பினர் பூபதி உட்பட பலர் பங்கேற்றனர்.

