ADDED : ஆக 12, 2024 05:54 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம்: விழுப்புரம் அருகே உடல் நிலை சரியில்லாததால் மனமுடைந்த பெண் தற்கொலை செய்து கொண்டார்.
விழுப்புரம் அடுத்த சொர்ணாவூர் கீழ்பாதி கிராமத்தைச் சேர்ந்தவர் மந்திரமூர்த்தி மனைவி முத்து லட்சுமி, 60; கடந்த ஓராண்டாக உடல் நிலை பாதிக்கப்பட்டு, வீட்டில் படுத்த படுக்கையாக இருந்து வந்தார். இதனால் மனமுடைந்த முத்துலட்சுமி, கடந்த 10ம் தேதி வீட்டிலிருந்து வெளியே சென்றவர், அப்பகுதியில் உள்ள வேப்பமரத்தில் புடவையால் துாக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
புகாரின் பேரில், வளவனுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.