/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
தேர்தல் பணிக்குழுவில் இடம் கிடைச்சாச்சு... அமைச்சர் மஸ்தான் ஆதரவாளர்கள் 'குஷி'
/
தேர்தல் பணிக்குழுவில் இடம் கிடைச்சாச்சு... அமைச்சர் மஸ்தான் ஆதரவாளர்கள் 'குஷி'
தேர்தல் பணிக்குழுவில் இடம் கிடைச்சாச்சு... அமைச்சர் மஸ்தான் ஆதரவாளர்கள் 'குஷி'
தேர்தல் பணிக்குழுவில் இடம் கிடைச்சாச்சு... அமைச்சர் மஸ்தான் ஆதரவாளர்கள் 'குஷி'
ADDED : ஜூன் 25, 2024 06:56 AM
தேர்தல் பணிக்குழுவில் அமைச்சர் மஸ்தான் இடம் பெற்றுள்ளதைத் தொடர்ந்து, அவரது ஆதரவாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
விக்கிரவாண்டி இடைத்தேர்தல் ஜூலை 10ம் தேதி நடைபெற உள்ளது. இதில் தி.மு.க.,வில் சிவா போட்டியிடுகிறார். இந்த தேர்தலில் தி.மு.க., சார்பில் அறிவிக்கப்பட்டிருந்த தேர்தல் பணிக்குழுவில், அமைச்சர்கள் பொன்முடி, கொள்கை பரப்பு செயலாளர் ஜெகத்ரட்சகன் எம்.பி., அமைச்சர்கள் நேரு, வேலு, பன்னீர்செல்வம், சக்கரபாணி, அன்பரசன், சிவசங்கர், கணேசன், மகேஷ், லட்சுமணன் எம்.எல்.ஏ., ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். ஆனால் விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த அமைச்சர் மஸ்தான் இடம் பெறவில்லை.
இதற்கிடையே கடந்த 11ம் தேதி அமைச்சர் மஸ்தான் வகித்து வந்த மாவட்ட செயலாளர் பதவி பறிக்கப்பட்டு, திண்டிவனத்தைச் சேர்ந்த மாவட்ட அவைத் தலைவராக இருந்து வந்த சேகருக்கு வடக்கு மாவட்ட செயலாளர் பதவி வழங்கப்பட்டது.
அதே போல் கட்சி தலைமை மாவட்ட செயலாளர் பதவிக்கு பதில், மஸ்தானுக்கு, சேகர் வகித்து வந்த மாவட்ட அவைத்தலைவர் பதவி வழங்கப்பட்டது. இந்த சூழ்நிலையில், விக்கிரவாண்டி இடைத்தேர்தலில், தேர்தல் பணிக்குழு சார்பில் அமைச்சர் மஸ்தானுக்கு பொறுப்பு கொடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி அமைச்சர் மஸ்தான் தலைமையில், மாவட்ட செயலாளர் சேகர் உள்ளிட்ட வடக்கு மாவட்டத்தைச் சேர்ந்த நிர்வாகிகளுக்கு, விக்கிரவாண்டி மேற்கு ஒன்றியத்தைச் சேர்ந்த செ.கொளப்பாக்கம், முட்டத்துார், செ.புதுார், நகர் ஆகிய கிராமங்களில் தேர்தல் பணி செய்வதற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அமைச்சர் மஸ்தானுக்கு கட்சி தலைமை தேர்தல் பணி வழங்கியுள்ளது, அவரது ஆதரவாளர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.