/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
அரசு பஸ் கவிழ்ந்து 21 பேர் படுகாயம்
/
அரசு பஸ் கவிழ்ந்து 21 பேர் படுகாயம்
ADDED : மே 07, 2024 11:58 PM
விக்கிரவாண்டி : விக்கிரவாண்டி அருகே அரசு பஸ் கவிழ்ந்ததில் 21 பேர் காயமடைந்தனர்.
கும்பகோணத்தில் இருந்து சென்னைக்கு அரசு விரைவு பஸ் நேற்று முன்தினம் இரவு 43 பயணிகளுடன் புறப்பட்டது. பஸ்சை கும்பகோணத்தைச் சேர்ந்த டிரைவர் சகாயசெல்வம் 51; ஓட்டினார். மணப்பாறையைச் சேர்ந்த ராஜசேகர், 33; கண்டக்டர் பணியில் இருந்தார்.
நள்ளிரவு 1:30 மணியளவில் பனையபுரம் அருகே வந்தபோது, கட்டுப்பாட்டை இழந்த பஸ் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது.
இதில் பஸ்சில் பயணம் செய்த பறவைக்கோட்டை மோகன்ராஜ், 34; ஜெயபிரகாஷ், 25; ஆவடி அமுதா, 57; மஞ்சள் மண்டி மோகன்தாஸ், 29; அவரது மனைவி ராகவி, 25; மேடவாக்கம் மதிவாணி, 63; கொளத்துார் ரகுவர்ணன், 34; மற்றும் டிரைவர், கண்டக்டர் உட்பட 21 பேர் காயமடைந்தனர் அனைவரும் சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சேர்த்தனர்.
புகாரின் பேரில், விக்கிரவாண்டி போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

