/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
அரசு கல்லுாரியில் மாணவர் சேர்க்கை விண்ணப்பங்கள் வரவேற்பு
/
அரசு கல்லுாரியில் மாணவர் சேர்க்கை விண்ணப்பங்கள் வரவேற்பு
அரசு கல்லுாரியில் மாணவர் சேர்க்கை விண்ணப்பங்கள் வரவேற்பு
அரசு கல்லுாரியில் மாணவர் சேர்க்கை விண்ணப்பங்கள் வரவேற்பு
ADDED : மே 07, 2024 11:43 PM
வானுார் : வானுார் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் இளநிலை பட்டப்படிப்பு முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
கல்லுாரி முதல்வர் வில்லியம் செய்திக்குறிப்பு: வானுார் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரி, திருச்சிற்றம்பலம் கூட்டுரோட்டில் உள்ள காந்தி மேல்நிலைப் பள்ளியில் செயல்பட்டு வருகிறது.
இக்கல்லுாரியில் 2024-25ம் ஆண்டிற்கான இளநிலை பட்டப்படிப்பு முதலாண்டு சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விண்ணப்பிக்க விரும்பவோர் www.tngasa.in என்ற இணையதள முகவரியில் கடந்த 6ம் தேதி முதல் பதிவு செய்யலாம்.
தாமாக இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க இயலாத மாணவர்களுக்கு உதவி சேர்க்கை மையம் இக்கல்லுாரியில் அமைக்கப்பட்டுள்ளது.
காலை 10:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை இந்த இயங்கும் இந்த மையத்தில், எஸ்.சி., - எஸ்.டி., பிரிவினருக்கு விண்ணப்ப கட்டணம் இல்லை. பதிவு கட்டணம் 2 ரூபாய் மட்டும் செலுத்த வேண்டும்.
ஏனைய பிரிவினருக்கு விண்ணப்ப கட்டணம் ஒரு மாணவருக்கு 48 ரூபாயும், பதிவு கட்டணம் 2 ரூபாயும் செலுத்த வேண்டும். விண்ணப்ப கட்டணம் டெபிட் கார்டு, கிரடிட் கார்டு, நெட் பேங்கிங், யுபிஐ., இணையதளம் வாயிலமாகவும் செலுத்தலாம். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுஉள்ளது.

