ADDED : மே 14, 2024 05:51 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டிவனம்: திண்டிவனம் அருகே அரசு பஸ், தேசிய நெடுஞ்சாலை சென்ட்டர் மீடியனில் மோதி கவிழ்ந்ததில் பயணிகள் அதிர்ஷ்டவசமாக காயமின்றி தப்பினர்.
கடலுாரிலிருந்து தாம்பரத்திற்கு நேற்று காலை அரசு பஸ் 60 பயணிகளுடன் சென்றது. பஸ்சை கடலுார், மஞ்சகுப்பத்தைச் சேர்ந்த ஞானமூர்த்தி, 55; ஓட்டினார். 6:30 மணியளவில், திண்டிவனம் - சென்னை சாலையில் கூச்சிக்குளத்துார் கூட்ரோடு வந்தபோது, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து, சென்டர் மீடியனில் மோதி கவிழ்ந்தது. விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
ஒலக்கூர் போலீசார் விரைந்து வந்து, பஸ்சை அப்புறப்படுத்தினர். மேலும், வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

