ADDED : செப் 11, 2024 12:17 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவெண்ணெய்நல்லுார், செப். 11-
திருவெண்ணெய்நல்லுார் அருகே ஏரியில் கிராவல் மண் கடத்தியவரை போலீசார் கைது செய்து, டிராக்டர் மற்றும் ஜே.சி.பி., இயந்திரத்தை பறிமுதல் செய்தனர்.
திருவெண்ணெய்நல்லுார் இன்ஸ்பெக்டர் மைக்கேல் இருதயராஜ் தலைமையிலான போலீசார் நேற்று அதிகாலை பெரியசெவலை கூட்ரோடு பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அப்பகுதியில் உள்ள ஏரியில் கிராவல் மண் கடத்தலில் ஈடுபட்ட அதே பகுதியைச் சேர்ந்த பெருமாள் மகன் சேகர், 38; என்பவரை கைது செய்தனர்.
மேலும் அங்கிருந்த 3 டிராக்டர்கள் மற்றும் ஜே.சி.பி., இயந்திரத்தை பறிமுதல் செய்தனர்.