/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
தண்ணீர் பந்தல் திறக்க வழிகாட்டுதல்
/
தண்ணீர் பந்தல் திறக்க வழிகாட்டுதல்
ADDED : மே 02, 2024 07:10 AM
விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டத்தில் தண்ணீர் பந்தல் திறக்க விரும்பும் அரசியல் கட்சிகள் தேர்தல் ஆணைய வழிகாட்டுதலை கடைபிடிக்க வேண்டும் என மாவட்ட தேர்தல் அலுவலர் பழனி தெரிவித்துள்ளார்.
தண்ணீர் பந்தல் திறப்பதன் மூலம் எந்த ஓர் அரசியல் கட்சியும், வேட்பாளரும் எந்த வித்திலும் அரசியல் ரீதியாக பயன்பெற கூடாது. தண்ணீர் பந்தல் திறப்பின் போது தேர்தல் நடத்தை விதிகள் கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
தண்ணீர் பந்தல் திறக்க விரும்பும்அரசியல் கட்சியும், வேட்பாளரும், தேர்தல் ஆணைய வழிகாட்டுதல்களுக்கு உட்பட்டு, சுகாதாரம், துாய்மையான குடிநீர் தொடர்பான அரசின் பிற அறிவுறுத்தல்களை கடைபிடிக்க வேண்டும் என மாவட்ட தேர்தல் அலுவலர் பழனி தெரிவித்துள்ளார்.

