நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மயிலம், : மயிலம் பொம்மபுர ஆதீன திருமடத்தில் குருபூஜை விழா நடந்தது.
விழாவையொட்டி, சித்தருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் வழிபாடு நடந்தது.
பின், மயிலம்பொம்மபுரஆதீனம் இருபதாம் பட்ட சுவாமிகள் பக்தர்களுக்கு ஆசி வழங்கினார். தொடர்ந்து காரைக்குடி ராமசாமி தமிழ் கல்லுாரி முன்னாள் முதல்வர் முருகசாமி, ஆதிகேசவன், ஓய்வு பெற்ற தமிழ் ஆசிரியர் வேணுகோபால், மயிலம் தமிழ்க்கல்லுாரி முதல்வர் திருநாவுக்கரசு ஆகியோர் சித்தரின் பெருமைகள் குறித்து சிறப்புரையாற்றினர்.
ராஜேஸ்வரி கலை அறிவியல் கல்லுாரி செயலாளர் சிவக்குமார், மயிலம் சிவப்பிரகாசர் பள்ளி தாளாளர் விஸ்வநாதன், தமிழ்க் கல்லுாரி செயலாளர் ராஜிவ்குமார் ராஜேந்திரன் உட்பட பலர் பங்கேற்றனர்.