நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம்: விழுப்புரத்தில் கடை வீதியில் குட்கா விற்றவரை போலீசார் கைது செய்தனர்.
விழுப்புரம் மேற்கு சப் இன்ஸ்பெக்டர் ஆனந்தராஜன் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் பழைய பஸ் நிலையம் எதிரே பாகர்ஷா வீதி காய்கறி மார்க்கெட் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது, அப்பகுதியில் பைக்கில் குட்கா பொட்டலங்கள் பதுக்கி விற்பனைக்கு எடுத்துச் சென்ற கமலா நகர், அன்வர், 53; என்பவரை போலீசார் பிடித்து, வழக்குப் பதிந்து கைது செய்து, 50 குட்கா பொட்டலங்களை பறிமுதல் செய்தனர்.