ADDED : செப் 04, 2024 12:14 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வானுார்: குட்கா பொருட்கள் விற்பனை செய்த பெட்டிக் கடைக்கு உணவு பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் போலீசார் சீல் வைத்தனர்.
கிளியனுார் பகுதிகளில் உள்ள கடைகளில் குட்கா பொருட்கள் விற்கப்படுவதாக எழுந்த புகாரின் பேரில், கிளியனுார் சப் இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன் மற்றும் வானுார் உணவு பாதுகாப்பு அலுவலர் மோகன் ஆகியோர் ஒவ்வொரு கடைகளையும் சோதனை செய்தனர்.
அப்போது, காட்ராம்பாக்கத்தில் உள்ள ஒரு பெட்டிக்கடையில் குட்கா பொருட்கள் பதுக்கி விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து, கடை உரிமையாளரான அதே பகுதியைச் சேர்ந்த கணேஷ், 25; என்பவர் மீது வழக்குப் பதிந்து, குட்கா பாக்கெட்டுக்களை பறிமுதல் செய்த போலீசார், அந்த கடைக்கு சீல் வைத்தனர்.