ADDED : செப் 06, 2024 12:28 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வானுார் : குட்கா பொருட்கள் விற்ற பெட்டிக் கடைக்கு உணவு பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் போலீசார் சீல் வைத்தனர்.
கிளியனுார் பகுதிகளில் உள்ள கடைகளில் குட்கா பொருட்கள் விற்கப்படுவதாக புகார் எழுந்தது. அதன்பேரில் நேற்று போலீசார் மற்றும் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் அப்பகுதி கடைகளில் திடீர் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது அதே பகுதியைச் சேர்ந்த பாஸ்கரன், 55; என்பவர் அவரது பெட்டிக் கடையில் குட்கா பதுக்கி விற்றது தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து, உணவு பாதுகாப்பு அலுவலர் மோகன், கிளியனுார் இன்ஸ்பெக்டர் பாலமுரளி ஆகியோர், கடைக்கு சீல் வைத்தனர்.