விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டத்தில், பகல் நேரங்களில் கடுமையான வெயில் வாட்டி வதைத்து வருகிறது. நேற்று முன்தினம் மாலை வரை வெயில் சுட்டெரித்தது.
நள்ளிரவு 12:00 மணிக்கு பலத்த மழை பெய்தது. தொடர்ந்து மாவட்டம் முழுவதும் 2 மணி நேரம் மழை கொட்டி தீர்த்தது.
இதனால், விழுப்புரத்தில் புதிய பஸ் நிலையம், ரயில்வே தரைப்பாலம், நகராட்சி மைதானம் போன்ற தாழ்வான இடங்களில் குளம்போல் மழை நீர் தேங்கியது.
வல்லம் அடுத்த, மொடையூர் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ஞானவேல், 55; என்பவரது வீட்டில் கட்டியிருந்த 2 ஆடுகள் மின்னல் தாக்கி இறந்தன.
மழையளவு மி.மீ., விபரம்: விழுப்புரம் 20, கோலியனுார் 42, வளவனுார் 51, கெடார் 22, முண்டியம்பாக்கம் 54, நேமூர் 59, கஞ்சனுார் 48, சூரப்பட்டு 24, வானுார் 42, திண்டிவனம் 79, மரக்காணம் 25, செஞ்சி 73, செம்மேடு 45, வல்லம் 102, அனந்தபுரம் 51, அவலுார்பேட்டை 54, வளத்தி 38, மணம்பூண்டி 33, முகையூர் 22, அரசூர் 50,திருவெண்ணெய்நல்லுார் 5, மி.மீ., மழை பதிவானது.