/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
ஹோலி ஏஞ்சல் பள்ளி 10ம் வகுப்பு தேர்வில் சாதனை
/
ஹோலி ஏஞ்சல் பள்ளி 10ம் வகுப்பு தேர்வில் சாதனை
ADDED : மே 10, 2024 09:14 PM

மயிலம்: மயிலம் அடுத்த ரெட்டணை ஹோலி ஏஞ்சல் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் 10ம் வகுப்பு தேர்வில் 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளனர்.
இப்பள்ளியில் தேர்வு எழுதிய மாணவி லீலாவதி, சிந்தனைச் செல்வன் ஆகியோர் தலா 500க்கு 487, அட்சயா 484, மாணவி ஸ்வேதா, மாணவர் செழியன் தலா 479 மதிப்பெண் பெற்று முதல் மூன்று இடங்களைப் பிடித்தனர்.
தேர்வு எழுதிய 64 மாணவ, மாணவிகளும் தேர்ச்சி பெற்றனர். 400க்கு மேல் 51 பேர பெற்றுள்ளனர்.
கணிதம் பாடத்தில் 9 பேர், அறிவியல் மற்றும் சமூக அறிவியல் பாடத்தில் 2 பேர் 100க்கு100 மதிப்பெண் பெற்றுள்ளனர்.
பள்ளி அளவில் சிறப்பிடம் பிடித்த மாணவ, மாணவியரை பள்ளி தாளாளர் பழனியப்பன், முதுநிலை முதல்வர் அகிலா, பள்ளி ஆசிரியர்கள் பாராட்டினர்.