/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
புனித வனத்து சின்னப்பர் ஆலய தேர்பவனி
/
புனித வனத்து சின்னப்பர் ஆலய தேர்பவனி
ADDED : ஆக 11, 2024 05:42 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம் : விழுப்புரம் அடுத்த கல்பட்டு புனித வனத்து சின்னப்பர் ஆலயத்தில் தேர் பவனி நடந்தது.
கடந்த 31ம் தேதி 123ம் ஆண்டு பெருவிழா கொடியேற்றத்தோடு துவங்கியது. தொடர்ந்து, கடந்த 8ம் தேதி காலை 8:00 மணிக்கு ஆடம்பர கூட்டு திருப்பலி புதுச்சேரி - கடலுார் உயர்மறை மாவட்ட பேராயர் பிரான்சிஸ் கலிஸ்ட் தலைமையில் நடந்தது. இரவு 8:00 மணிக்கு அபிஷேக வழிபாடும், 9:30 மணிக்கு ஆடம்பர தேர்பவனியும் நடந்தது. திரளான கிறிஸ்தவர்கள் பங்கேற்றனர். நேற்று காலை 6:00 மணிக்கு நன்றி திருப்பலி நடத்தப்பட்டு, கொடியிறக்கப்பட்டது.