ADDED : செப் 04, 2024 11:06 PM
மரக்காணம்: மரக்காணம் அடுத்த வெள்ளகுளம் கிராமத்தில் விவசாயிகளுக்கான தோட்டக்கலைப் பயிர் பயிற்சி முகாம் நடந்தது.
மரக்காணம் அருகே உள்ள வெள்ளகுளம் கிராமம், வி.சி.டி.எஸ்., தொண்டு நிறுவனத்தில் சார்பில் பாரம்பரிய இயற்கை விவசாயத்தை புதுப்பித்தலும், நஞ்சில்லா உணவு உற்பத்தி செய்வது குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி முகாம் நடந்தது.முகாமிற்கு வி.சி.டி.எஸ்., திட்ட மேலாளர் ஜோஸ்பின் பவித்ராதேவி தலைமை தாங்கினார். தமிழ்நாடு சிறுவிவசாயிகள் முன்னேற்ற சங்க நிர்வாகி மணி, வேளாண்மை உதவி இயக்குநர் சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
முகாமில் மேலும் விவசாயிகளுக்கான தேட்டக்கலை மற்றும் ஒருங்கிணைந்த விவசாயம் குறித்து பயிற்சி நடந்தது. விவசாயிகளுக்கு அரசின் திட்டங்கள் சலுகைகள் பற்றி விளக்கமளித்தனர். வன்னிப்பேர், ஏந்துார், பரங்கனி கிராமத்தில் இருந்து 50க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.