ADDED : ஜூன் 24, 2024 05:59 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம் : விழுப்புரத்தில் குடும்பத் தகராறில் கணவர் தற்கொலை செய்து கொண்டார்.
விழுப்புரம், சாலாமேடு பகுதியைச் சேர்ந்தவர் ராஜசேகர், 49; ஓட்டல் உரிமையாளர். தினமும் குடித்து விட்டு வீட்டிற்கு சென்றதால் கணவன், மனைவிக்குமிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது.
இதனால், மனமுடைந்த ராஜசேகர் கடந்த 19ம் தேதி வீட்டில் பூச்சி மருந்து குடித்தார். உடன், முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
அங்கு அவர், நேற்று இறந்தார். விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.