/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
மனைவி பிரிந்ததால் கணவர் தற்கொலை
/
மனைவி பிரிந்ததால் கணவர் தற்கொலை
ADDED : ஏப் 18, 2024 11:26 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம் : விழுப்புரத்தில் மனைவி பிரிந்து சென்றதால் மனமுடைந்த கணவர் தற்கொலை செய்து கொண்டார்.
விழுப்புரம், வி.மருதுாரைச் சேர்ந்தவர் பெரியசாமி மகன் மணிகண்டன், 38; தச்சு தொழிலாளி. திருமணமாகி 14 ஆண்டுகள் ஆகிறது. கல்பனா, 35; என்ற மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர்.
கடந்த சில நாட்களுக்கு முன், மணிகண்டனுடன் ஏற்பட்ட குடும்பத் தகராறில் கல்பனா, பிள்ளைகளுடன் பண்ருட்டியில் உள்ள அவருடைய தாய் வீட்டிற்குச் சென்று விட்டார்.
இதனால், மனமுடைந்த மணிகண்டன், நேற்று வீட்டில் துாக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். புகாரின் பேரில், விழுப்புரம் டவுன் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

