/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
பலருடன் கள்ளத் தொடர்பு மனைவியை கொலை செய்தேன்; கைதான கணவர் வாக்குமூலம்

ADDED : ஆக 23, 2024 01:03 AM
உளுந்துார்பேட்டை: பலருடன் தொடர்பு இருந்ததால் மனைவியை கொலை செய்தேன் என கைதான கணவர் வாக்குமூலம் கொடுத்துள்ளார்.
உளுந்துார்பேட்டை அடுத்த பாண்டூர் கிராமத்தைச் சேர்ந்தவர் அசோக்குமார்,29; ஆட்டோ டிரைவர்ன. இவரது மனைவி ரமணி,32; இரு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் கடந்த 19ம் தேதி கணவன் மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. அதில், அசோக்குமார் தாக்கியதில் ரமணி இறந்தார்.
இதுகுறித்து எடைக்கல் போலீசார் வழக்கு பதிந்து, அசோக்குமாரை கைது செய்தனர். விசாரணையில், ரமணியை திருமணம் செய்த கொண்ட பிறகே அவருக்கு ஏற்கனவே இருமுறை திருமணம் ஆனவர் என்பது தெரிய வந்தது. மேலும், ரமணி பலருடன் கள்ளத் தொடர்பு வைத்திருந்தை கண்டித்தேன். அதற்கு அவர், தனக்கு ஆள் பலம் உள்ளதாகவும், என்னை கொலை செய்துவிடுவதாக மிரட்டினார்.
அதில் ஆத்திரமடைந்து ரமணியை அடித்து கொலை செய்ததாக கூறியுள்ளார்.