/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
மோடிக்கு ஓட்டு போட்டால் நாட்டுக்கும் வீட்டுக்கும் கேடு: அமைச்சர் மஸ்தான்
/
மோடிக்கு ஓட்டு போட்டால் நாட்டுக்கும் வீட்டுக்கும் கேடு: அமைச்சர் மஸ்தான்
மோடிக்கு ஓட்டு போட்டால் நாட்டுக்கும் வீட்டுக்கும் கேடு: அமைச்சர் மஸ்தான்
மோடிக்கு ஓட்டு போட்டால் நாட்டுக்கும் வீட்டுக்கும் கேடு: அமைச்சர் மஸ்தான்
ADDED : ஏப் 13, 2024 04:59 AM

செஞ்சி: மோடிக்கு ஓட்டு போட்டால் நாட்டுக்கும், வீட்டுக்கும் கேடு என அமைச்சர் மஸ்தான் பேசினார்.
வல்லம் ஒன்றியம் நெகனுார், ஈச்சூர், தானுார், கள்ளப்புளியூர் உள்ளிட்ட கிராமங்களில் ஆரணி தொகுதி தி.மு.க., வேட்பாளர் தரணி வேந்தனுக்கு ஓட்டு கேட்டு அமைச்சர் மஸ்தான் பிரசாரம் செய்த போது பேசியதாவது.
செஞ்சி பகுதியில் கல்லுாரி இல்லை. நம் வீட்டு பிள்ளைகள் படிக்க கல்லுாரி வேண்டும் என்று உங்கள் சார்பில் முதல்வரிடம் கேட்டேன் உடனே கல்லுாரி வழங்கினார். செஞ்சியில் இரண்டு ஆண்டுடாக கல்லுாரி இயங்கி வருகிறது. தற்போது கட்டடம் கட்டும் பணி நடந்து வருகிறது.
நம் வீட்டு பிள்ளைகள் படிக்க வேண்டும் என்பதற்காக புதுமை பெண் திட்டத்தில் கல்லுாரி செல்லும் மாணவிகளுக்கு 1000 ரூபாயும், மாணவர்களுக்கு தமிழ் புலவன் திட்டத்தில் 1000 ரூபாயும் வழங்கி வருகிறார்.
நம் வீட்டு பிள்ளைகள் படிக்க வேண்டும் என்று நினைப்பவர் முதல்வர் ஸ்டாலின். படிக்க கூடாது என்று நினைப்பவர் மோடி. நீட் தேர்வை கொண்டு வந்து நம் வீட்டு பிள்ளைகள் டாக்டராவதற்கு தடை போட்டவர் மோடி.
எந்த நாட்டிலும் அரிசிக்கு வரி கிடையாது. ஆனால் அரிசிக்கும் வரிபோட்ட அரக்க குணம் கொண்டவர் மோடி.
இந்தியாவில் உள்ள 142 கோடி மக்களுக்கு ஆட்சி செய்யாமல் பணக்காரர்களுக்கு மோடி ஆட்சி செய்கிறார். மோடியை வீட்டுக்கு அனுப்பியாக வேண்டும். தி.மு.க., கூட்டணிக்கு ஓட்டு போட்டால் நாட்டிற்கும், வீட்டிற்கும் நன்மை. மோடிக்கு ஓட்டு போட்டால் நாட்டிற்கும், வீட்டிற்கும் கேடு, என்று அமைச்சர் மஸ்தான் பேசினார்.
இதில் ஒன்றிய சேர்மன் அமுதா ரவிக்குமார், ஒன்றிய செயலாளர்கள் அண்ணாதுரை, துரை, இளஞ்செழியன், மாவட்ட கவுன்சிலர் அன்புசெழியன், தொழிலாளர் அணி தமிழரசன் மற்றும் நிர்வாகிகள், கூட்டணி கட்சியினர் கலந்து கொண்டனர்.

