/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
மாணவர்களுக்கு மாவட்ட அளவில் கல்விக் கடன் முகாம் துவக்க விழா
/
மாணவர்களுக்கு மாவட்ட அளவில் கல்விக் கடன் முகாம் துவக்க விழா
மாணவர்களுக்கு மாவட்ட அளவில் கல்விக் கடன் முகாம் துவக்க விழா
மாணவர்களுக்கு மாவட்ட அளவில் கல்விக் கடன் முகாம் துவக்க விழா
ADDED : செப் 01, 2024 04:06 AM

விழுப்புரம் : விழுப்புரம் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூட்டரங்கில், மாவட்ட அளவிலான கல்விக் கடன் முகாம் துவக்க விழா நடந்தது.
கலெக்டர் பழனி தலைமை தாங்கினார். அன்னியூர் சிவா எம்.எல்.ஏ., முன்னிலை வகித்தார். அமைச்சர் பொன்முடி, முகாமை துவக்கி வைத்து, 45 கல்லுாரி மாணவர்களுக்கு 2.45 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அனுமதி கல்விக்கடன் பெறுவதற்கான ஆணையை வழங்கி, பேசியதாவது:
இந்த முகாமில் உயர்கல்வி பயிலும் மாணவ, மாணவிகள் அரசு வழங்கிய வழிகாட்டு நெறிமுறைகளின் கல்வி கடன் வேண்டி விண்ணப்பிக்கலாம்.
தற்போது, 100 மாணவர்களுக்கு கல்விக்கடன் கோரி விண்ணப்பித்த நிலையில், 45 கல்லுாரி மாணவர்களுக்கு 2.45 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அனுமதி கல்விக்கடன் பெறுவதற்கான ஆணை வழங்கப்பட்டுள்ளது.
அந்த வகையில், 2024-25ம் ஆண்டில் 184 பேருக்கு 5.54 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கல்விக்கடன் வழங்கப்பட்டுள்ளது. மற்ற மாணவர்களுக்கு பரிசீலித்து விரைவில் வழங்கப்படும்.
தமிழகத்தில் உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு மட்டுமின்றி, வெளிநாடுகளில் கல்வி பயிலும் மாணவர்களுக்கும் கல்விக்கடன் வழங்கப்பட்டு வருகிறது. மாணவர்களாகிய நீங்கள், கல்விக்கடனை பெற்று நல்ல முறையில் தங்கள் உயர்கல்வி படிப்பை நிறைவு செய்து, நல்ல வேலைவாய்ப்பை ஏற்படுத்தி கொள்ள வேண்டும்.
கல்லுாரி படிப்பு முடிந்து வேலைவாய்ப்பு பெற்ற ஓராண்டு சென்ற பின், தங்கள் கல்விக்கடனை திரும்ப செலுத்துவதில் கவனம் செலுத்திட வேண்டும். படிக்கும் காலத்தில் விளையாட்டு போட்டிகளிலும் பங்கேற்க வேண்டும்.
அரசு வேலைவாய்பை பெறும் விதமாக, அரசு போட்டி தேர்விற்கான பாடங்களையும் நன்றாக படித்து அரசு வேலைவாய்ப்பு பெற சிறந்த சமூகத்தை உருவாக்கிட வேண்டும்.
இவ்வாறு பொன்முடி பேசினார்.
நிகழ்ச்சியில், மாவட்ட சேர்மன் ஜெயச்சந்திரன், உதவி இயக்குனர் சிவ நடராஜன், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் ராஜேஷ்வரன், இந்தியன் வங்கி மேலாளர் அரிகரசுதன் உட்பட அலுவலர்கள் பலர் பங்கேற்றனர்.