/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
புதிய அங்கன்வாடி மைய கட்டடம் திறப்பு விழா
/
புதிய அங்கன்வாடி மைய கட்டடம் திறப்பு விழா
ADDED : ஆக 24, 2024 07:14 AM

மயிலம்: ஆலகிராமத்தில் புதிய அங்கன்வாடி கட்டட திறப்பு விழா நடந்தது.
மயிலம் அடுத்த ஆலகிராமம் ஊராட்சியில் புதியதாக ரூபாய் பத்து லட்சம் செலவில் கட்டப்பட்ட அங்கன்வாடி மையத்தை மயிலம் எம். எல்.ஏ ., சிவக்குமார் திறந்து வைத்து சிறப்புரை ஆற்றினார். மயிலம் ஒன்றிய பா.ம.க., செயலாளர் சேட்டு, கிளைச் செயலாளர்கள் கோபாலகிருஷ்ணன்,சங்கர் முன்னிலை வகித்தனர். பூங்காவனம் வரவேற்றார்.
இதில் கட்சி நிர்வாகிகள், ராமமூர்த்தி, தங்கமணி, ரமணராஜன், மாரியப்பன், சதானந்தம், கவியரசன், சிலம்பரசன், மயிலப்பன், பார்த்திபன், மாசிலாமணி, பெருமாள், ஏழுமலை, கிருபாகரன், தினேஷ், அங்கன்வாடி பணியாளர்கள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

