ADDED : மார் 29, 2024 04:53 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
செஞ்சி: செஞ்சி தாலுகா நுகர்பொருள் விநியோகஸ்தர்கள் சங்க புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா நடந்தது.
கவுரவ தலைவர் செல்வராஜ் தலைமை தாங்கினார். மதிப்பியல் தலைவர்கள் கலியமூர்த்தி, கண்ணன், வெங்கட், ராஜகோபால், சையத் உஸ்மான் ஆகியோர் முன்னிலை வகித்தனர். துணைத் தலைவர் ரவிச்சந்திரன் வரவேற்றார். புதிய தலைவராக மணிகண்டன், செயலாளராக ஜானகிராமன், பொருளாளராக விஜயகுமார் பதவியேற்றனர்.
துணைத் தலைவர் கார்த்திகேயன், இணை செயலாளர்கள் துரை பாண்டியன், முருகன், பார்த்திபன், சத்தியசீலன், சையத் உஸ்மான் உட்பட பலர் பங்கேற்றனர்.