/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
அங்கன்வாடி மைய கட்டடம் திறப்பு விழா
/
அங்கன்வாடி மைய கட்டடம் திறப்பு விழா
ADDED : ஆக 25, 2024 06:18 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மயிலம்: மயிலம் அடுத்த ஆலகிராமம் ஊராட்சியில் புதிதாக 10 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்ட அங்கன்வாடி மைய கட்டடம் திறப்பு விழா நடந்தது.
புதிய கட்டடத்தை சிவக்குமார் எம்.எல்.ஏ., திறந்து வைத்து சிறப்புரையாற்றினார். மயிலம் ஒன்றிய பா.ம.க., செயலாளர் சேட்டு, கிளைச் செயலாளர்கள் கோபாலகிருஷ்ணன், சங்கர் முன்னிலை வகித்தனர். பூங்காவனம் வரவேற்றார்.
விழாவில், கட்சி நிர்வாகிகள், ராமமூர்த்தி, தங்கமணி, ரமணராஜன், மாரியப்பன், சதானந்தம், கவியரசன், சிலம்பரசன், அங்கன்வாடி பணியாளர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.

