/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
திண்டுக்கல் தலப்பாகட்டி கிளை திறப்பு விழா
/
திண்டுக்கல் தலப்பாகட்டி கிளை திறப்பு விழா
ADDED : ஏப் 05, 2024 11:41 PM

விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி டோல்கேட்டில் 'ஏ2பி' அருகே திண்டுக்கல் தலப்பாகட்டியின் 103 வது கிளை திறப்பு விழா நடந்தது.
நிர்வாக இயக்குனர் நாகசாமி தனபாலன் தலைமை தாங்கி திறந்து வைத்து குத்துவிளக்கேற்றினார். முதல் விற்பனையை தொழில்அதிபர் செல்வம், ரமாசெல்வம் துவக்கி வைத்தனர். இயக்குனர் ரவிக்கண்ணன், தலைமை தொழில் அதிகாரி செந்தில்குமார் முன்னிலை வகித்தனர்.
நிர்வாக இயக்குனர் நாகசாமி தனபாலன் கூறியதாவது:
எங்களது முதலாவது கிளையை திண்டுக்கல்லில் கடந்த 1957ம் ஆண்டு துவங்கி 67ஆண்டுகளாக பாரம்பரிய சுவையுடன் கோவை, திருப்பூர், ஈரோடு, சென்னை போன்ற தமிழகத்தின் அனைத்து நகரங்களிலும், கர்நாடகா, கேரளா போன்ற வெளி மாநிலங்களிலும், மலேசியா, சிங்கப்பூர், அமெரிக்கா போன்ற 7 வெளிநாடுகளில் திண்டுக்கல் தலப்பாகட்டி உள்ளது.
விக்கிரவாண்டியில் 103வது கிளையை துவங்கியுள்ளோம். பாரம்பரிய முறையில் இயற்கையான மசாலா பொருட்களால் சமைக்கப்பட்ட பிரியாணி உட்பட 100க்கும் மேற்பட்ட உணவு வகைகள் மற்றும் சைவ பிரியர்களுக்கு தனியே மீல்ஸ் உட்பட பல வெரைட்டி உணவுகளும் கிடைக்கும்.
மாவட்ட சேர்மன் ஜெயச்சந்திரன், மாநில விவசாய அணி துணைத் தலைவர் சிவா, தொழிலதிபர்கள் பாபு ஜீவானந்தம், உணவு பாதுகாப்பு அதிகாரி சுகந்தன் உட்பட பலர் பங்கேற்றனர்.

