ADDED : ஆக 11, 2024 05:18 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
செஞ்சி, : விழுப்புரம் வடக்கு மாவட்ட தி.மு.க., இளைஞரணி சார்பில் செஞ்சியில் கருணாநிதி நுாலகம் திறப்பு விழா நடந்தது.
மாவட்ட செயலாளர் சேகர் தலைமை தாங்கினார். இளைஞரணி துணை அமைப்பாளர்கள் ரமேஷ், உதயகுமார், பாபு, அண்ணாமலை, விஜயகுமார் முன்னிலை வகித்தனர். மாவட்ட அமைப்பாளர் ஆனந்த் வரவேற்றார்.
அமைச்சர் மஸ்தான், இளைஞரணி மாநில துணைச் செயலாளர் அப்துல் மாலிக் நுாலகத்தை திறந்து வைத்தனர். முன்னாள் எம்.எல்.ஏ., செந்தமிழ்ச் செல்வன், ஒன்றிய சேர்மன் விஜயகுமார், பேரூராட்சி சேர்மன் மொக்தியார், துணைச் சேர்மன் ஜெயபாலன், விவசாய அணி தலைவர் கணேசன், நகர செயலாளர்கள், ஒன்றிய செயலாளர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.