ADDED : ஆக 15, 2024 05:34 AM
கண்டாச்சிபுரம்: விழுப்புரம் அடுத்த கெடாரில் வணிகர் சங்கங்களின் பேரவை தொடக்கவிழா நடைபெற்றது.
விழுப்புரம் அடுத்த கெடார்,வீரமூர்,புத்துப்பாளையம் ஆகிய பகுதி வணிகர்களை ஒன்றிணைத்து வணிகர் சங்க துவக்கவிழா நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு மாவட்டத் தலைவர் கண்ணன் தலைமை தாங்கினார்.
மாவட்ட செயலாளர் வெங்கடேசன், பொருளாளர் முத்துக்கருப்பன், ரவிச்சந்திரன், முருகன் முன்னிலை வகித்தனர்.
கெடார் பகுதி நிர்வாகி மணிகண்டன் வரவேற்றார். தமிழ்நாடு வணிகர் சங்க மாநிலத் தலைவர் வெள்ளையன் நிர்வாகிகளை அறிமுகப்படுத்தி வணிகர்களின் ஒற்றுமை குறித்து பேசினார்.
இதில் மாநில நிர்வாகிகள் சவுந்தர்ராஜன்,பீர்முகம்மது மற்றும் மாவட்ட, ஊள்ளுர் பகுதி வணிகர் சங்க நிர்வாகிகள், வணிகர்கள், பொதுமக்கள் உட்பட பலர் நலந்துகொண்டனர்.
தங்கபிரகாஷ் நன்றி கூறினார்.இதற்கான ஏற்பாடுகளை கெடார் பகுதி வணிகர்கள் செய்தனர்.