/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
மாவட்டத்தில் சுதந்திர தின கொடியேற்றம்
/
மாவட்டத்தில் சுதந்திர தின கொடியேற்றம்
ADDED : ஆக 16, 2024 06:22 AM

விழுப்புரம்: விழுப்புரம் நகராட்சி அலுவலகத்தில் 78வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது.
நிகழ்ச்சிக்கு, நகரமன்ற தலைவர் தமிழ்செல்வி பிரபு தலைமை தாங்கி, தேசியகொடி ஏற்றி மரியாதை செலுத்தி நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
கமிஷனர் (பொறுப்பு) ஸ்ரீபிரியா உட்பட பலர் பங்கேற்றனர்.
விழுப்புரம் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் நுகர்வோர் ஆணைய தலைவர் சதீஷ்குமார் தலைமை தாங்கினார். இவர் தொடர்ந்து, பீமநாயக்கன் தோப்பு நகராட்சி மேல்நிலை பள்ளியில் தேசிய கொடி ஏற்றி மரியாதை செலுத்தினார். மாணவ, மாணவிகளுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டது.
விழுப்புரம் ரயில் நிலையத்தில் ரயில்வே இன்ஸ்பெக்டர் நிதிக்குமார் தேசிய கொடியேற்றி மரியாதை செலுத்தினார். பின், இவர், சிறப்பாக பணிபுரிந்த காவலர்களுக்கு, பரிசு தொகையை வழங்கி கவுரவித்தார்.
விக்கிரவாண்டி
விக்கிரவாண்டி ஒன்றிய அலுவலகத்தில் சேர்மன் சங்கீத அரசி ரவிதுரை தலைமையில், தேசியக்கொடி ஏற்றப்பட்டது. துணைச் சேர்மன் ஜீவிதா ரவி பி.டி.ஓ.,க்கள் பாலச்சந்திரன், குலோத்துங்கன் பங்கேற்றனர்.
பேரூராட்சி அலுவலகத்தில் சேர்மன் அப்துல் சலாம் தலைமை தாங்கி தேசிய கொடி ஏற்றினார். துணைச் சேர்மன் பாலாஜி உட்பட பலர் பங்கேற்றனர்.
வானுார்
கிளியனுார் அரசு மேல்நிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியர் நாகமணி தலைமை தாங்கினார். உதவி தலைமையாசிரியர் சங்கர் வரவேற்றார். சிறப்பு விருந்தினராக சக்கரபாணி எம்.எல்.ஏ., தேசிய கொடியேற்றி வைத்து, மாணவ, மாணவியர்களுக்கு இனிப்பு வழங்கினார். பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.
மயிலம்
மயிலம் பொறியியல் கல்லுாரி வளாகத்தில் கல்விக் குழும சேர்மன் தனசேகரன் தலைமை தாங்கி தேசிய கொடியேற்றினார்.செயலாளர் நாராயணசாமி, பொருளாளர் ராஜராஜன், இயக்குனர் செந்தில் முன்னிலை வகித்தனர். கல்லுாரி முதல்வர் ராஜப்பன் வரவேற்றார். நிகழ்ச்சியில் மயிலம் செவிலியர் கல்லுாரி முதல்வர் தமிழ்ச்செல்வி உட்பட பலர் பங்கேற்றனர்.
திண்டிவனம்
கீழ்கூடலுார் ராஜபாதர் தாகூர் கல்வியியல் கல்லுாரி மற்றும் இந்திரா காந்தி ஜெயந்தி கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் ஒலக்கூர் ஒன்றிய சேர்மன் சொக்கலிங்கம் தேசிய கொடியை ஏற்றி வைத்தார்.
கல்லுாரி தலைவர் துணைத் தலைவர், செயலாளர், முதல்வர் உட்பட பலர் பங்கேற்றனர்.
சாணக்யா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் தாளாளர் தேவராஜ் தலைமை தாங்கினார். முதல்வர் அருள்மொழி முன்னிலை வகித்தார். பள்ளியின் துணைத் தலைவர் வேல்முருகன் தேசிய கொடியை ஏற்றினார்.
வானுார்
ரெட்டணை கென்னடி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் கல்விக் குழும தலைவர் சண்முகம் தலைமை தாங்கினார். பள்ளி முதல்வர் சந்தோஷ், தேசிய கொடியேற்றி வைத்து சிறப்புரையாற்றினார். என்.சி.சி., மாணவர்களின் அணிவகுப்பு, பேச்சுப்போட்டி, ஓவியப்போட்டி, கட்டுரைப்போட்டி, மாறுவேடப்போட்டி பட்டிமன்றம் நடந்தது.
கண்டமங்கலம்
கண்டமங்கலம் ஒன்றிய அலுவலகத்தில் சேர்மன் வாசன் தேசிய கொடியேற்றி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து பள்ளி மாணவ-மாணவிகளுக்கு இனிப்பு, நோட்டுப் புத்தகம், எழுது பொருட்கள் வழங்கினார். ஒன்றிய துணைச் சேர்மன் நஜீராபேகம்தமின், ஒன்றிய கவுன்சிலர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.