/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
தானியங்கி மழை மானி கலெக்டர் ஆய்வு
/
தானியங்கி மழை மானி கலெக்டர் ஆய்வு
ADDED : ஆக 04, 2024 12:12 AM

விழுப்புரம்: விழுப்புரம் தாலுகா அலுவலகத்தில் தானியங்கி மழை மானி அமைக்கப்படுவதை கலெக்டர் ஆய்வு செய்தார்.
விழுப்புரம் கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் உள்ள தாலுகா அலுவலகத்தில், புதிதாக தானியங்கி மழை மானி அமைக்கும் பணி நடந்தது. இப்பணியை, கலெக்டர் பழனி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தொடர்ந்து, அவசர கால பேரிடர் மேலாண்மை மையத்தில், புதிதாக பூகம்பமானி அமைப்பதற்கான சிவில் பணிகள் முடிக்கப்பட்டு, தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ள, பூகம்ப மானிக்கான துாணையும் பார்வையிட்டார்.
அப்போது, இந்த பூகம்ப மானி துாணில், இந்த மாதம், டில்லி தேசிய பூகம்பவியல் ஆய்வு மைய விஞ்ஞானிகள் மூலம், பூகம்பமானி அமைக்கப்பட உள்ள பணிகளின் நிலவரம் குறித்து, அலுவலர்களிடம் கேட்டறிந்தார். கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) யோகஜோதி, பேரிடர் மேலாண்மை தனி தாசில்தார் அருண் உட்பட பலர் உடனிருந்தனர்.