/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
நெடுஞ்சாலைத்துறை பணி குறித்து உள்தணிக்கை குழுவினர் ஆய்வு
/
நெடுஞ்சாலைத்துறை பணி குறித்து உள்தணிக்கை குழுவினர் ஆய்வு
நெடுஞ்சாலைத்துறை பணி குறித்து உள்தணிக்கை குழுவினர் ஆய்வு
நெடுஞ்சாலைத்துறை பணி குறித்து உள்தணிக்கை குழுவினர் ஆய்வு
ADDED : மே 08, 2024 11:55 PM

திண்டிவனம் : நெடுஞ்சாலைத்துறை சார்பில் பணிகளின் தரம் குறித்து, உள் தணிக்கை குழு ஆய்வு நடத்தியது.
தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சார்பில், ஆண்டு தோறும் மே மாதத்தின் பணிகளின் தரம் குறித்து உள்தணிக்கை குழு ஆய்வு மேற்கொள்ளும்.
அதே போல் விழுப்புரம் உட்கோட்டத்தின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள வெள்ளிமேடுப்பேட்டை - புதுச்சேரி சாலை (வழி) மயிலம் இரு வழிச்சாலையை நான்கு வழிச்சாலையாக மாற்றும் பணிகள் குறித்து பெரமண்டூர் சாலை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
தஞ்சாவூர் கண்காணிப்பு பொறியாளர் செல்வி தலைமையில், உதவி கோட்ட பொறியாளர் சத்தியன், உதவி பொறியாளர் அன்சாரிராஜா, இளநிலை பொறியாளர் பாலச்சந்திரன் ஆகியோர் கொண்ட குழுவினர் ஆய்வு செய்தனர்.
திண்டிவனம் உதவி கோட்ட பொறியாளர் கவிதா, இளநிலை பொறியாளர் ராமு, உதவி பொறியாளர் தீனதயாளன், தரக்கட்டுப்பாட்டு அலகில் உதவி கோட்ட பொறியாளர் மகேஷ் உட்பட பலர் பங்கேற்றனர்.