/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
கமலா கல்வியியல் கல்லுாரியில் பன்னாட்டு கருத்தரங்கம்
/
கமலா கல்வியியல் கல்லுாரியில் பன்னாட்டு கருத்தரங்கம்
கமலா கல்வியியல் கல்லுாரியில் பன்னாட்டு கருத்தரங்கம்
கமலா கல்வியியல் கல்லுாரியில் பன்னாட்டு கருத்தரங்கம்
ADDED : ஆக 03, 2024 04:45 AM

விழுப்புரம்: திருநாவலுார் ஜோசப் கல்லுாரி, கமலா கல்வியியல் கல்லுாரி சார்பில் பன்னாட்டு வணிகவியல் கல்வி கருத்தரங்கம் நடந்தது.
ஜோசப் கல்லுாரி கலையரங்கில் நடந்த கருத்தரங்கில், அண்ணாமலை பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் பிரகாஷ், மேலாண்மை துறை பேராசிரியர் பிரகதீஸ்வரன் பேசினர். கல்லுாரி செயலாளர் பிரபாகர் ஜெயராஜ், தாளாளர் கமலா ஜோசப், முதல்வர் ஏஞ்சல் ஜாஸ்மின், டீன் கதிர்வேல் மற்றும் கல்லுாரி பேராசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.
கருத்தரங்கில் விழுப்புரம் எம்.ஜி.ஆர்., மகளிர் கல்லுாரி, கடலுார் கிருஷ்ணசாமி மகளிர் கல்லுாரி, நெய்வேலி ஜவகர் கல்லுாரி, அண்ணாமலை பல்கலைக்கழகம், உளுந்துார்பேட்டை ஜவஹர்லால் நேரு மகளிர் கல்லுாரி, விழுப்புரம் இ.எஸ். கல்லுாரி, மயிலாடுதுறை ஏ.வி.எஸ். கல்லுாரி, புதுச்சேரி ராஜிவ் காந்தி கல்லுாரி, கள்ளக்குறிச்சி அரசு கல்லுாரி, வடலுார் அரசு கல்லுாரி மாணவர்கள் 100க்கும் மேற்பட்ட ஆய்வு கட்டுரைகளை சமர்ப்பித்தனர்.
சிறந்த கட்டுரைகளுக்கு பரிசு வழங்கப்பட்டது.