/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
சேக்ரட் ஹார்ட் கல்லுாரியில் பன்னாட்டு கருத்தரங்கு
/
சேக்ரட் ஹார்ட் கல்லுாரியில் பன்னாட்டு கருத்தரங்கு
ADDED : மார் 03, 2025 11:48 PM

விழுப்புரம், ; விக்கிரவாண்டி அடுத்த பேரணியில் உள்ள சேக்ரட் ஹார்ட் கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் பன்னாட்டு கருத்தரங்கம் நடந்தது.
கடந்த 27, 28ம் தேதிகளில் முதுகலை ஆங்கில துறை சார்பில் நடந்த கருத்தரங்கில், இலக்கியம், மொழி, தொழில்நுட்பம் ஒருங்கிணைத்தல் பற்றியும், ஆங்கில கல்வியில் புரட்சியை ஏற்படுத்துதல், செயற்கை நுண்ணறிவின் உருமாறும் சக்தி, ஆங்கில இலக்கியம் மற்றும் மொழியை கற்பித்தல், ஐ.சி.டி., கருவிகளை ஒருங்கிணைப்பதற்கான புதிய முறைகள் உட்பட பல தலைப்புகளில் பேராசிரியர்கள் பேசினர். பேராசிரியர்கள், ஆய்வாளர்கள், முதுகலை, இளங்களை மாணவர்கள் பங்கேற்றனர்.
கருத்தரங்கில் ஆங்கில கல்வியின் எதிர்காலத்தை வடிவமைக்க ஓமன் நாட்டிலிருந்து வந்த ஐஸ்டின் ஜேம்ஸ், ஏஐ தொழில்நுட்ப முறையில் பயிற்றுவித்தல் குறித்து சிறப்புரையாற்றினார். கல்லுாரி செயலர் பிரிட்டோ, முதல்வர் டேவிட் சவுந்தர் பங்கேற்றனர்.

