/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
ஸ்ரீரங்க பூபதி கல்லுாரியில் உலக மகளிர் தின விழா
/
ஸ்ரீரங்க பூபதி கல்லுாரியில் உலக மகளிர் தின விழா
ADDED : மார் 10, 2025 05:58 AM

செஞ்சி: ஆலம்பூண்டி ஸ்ரீரங்கபூபதி கல்லுாரி மற்றும் இன்டர்நேஷனல் பள்ளியில் உலக மகளிர் தின விழா நடந்தது.
தாளாளர் ரங்க பூபதி தலைமை தாங்கினார். இயக்குனர் சாந்தி முன்னிலை வகித்தார். செயலாளர் ஸ்ரீபதி வரவேற்றார். இயக்குனர் சரண்யா கேக் வெட்டினார்.
நிகழ்ச்சியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவிகள் மகளிரை மதிப்போம், துணை நிற்போம், கொண்டாடுவோம் என்ற ஆங்கில வாசகத்தின் வடிவில் கழுகு பார்வையில் அணிவகுத்து நின்று மகளிர் தின உறுதி மொழி ஏற்றனர்.
நர்சிங் கல்லுாரி முதல்வர் ஜெயலட்சுமி, பார்மசி துறை பேராசிரியர் இலக்கியா, வினுஸ்ரீ, லில்லிஜுடி, கல்வியியல் கல்லுாரி பேராசிரியர்கள் ஆதிலட்சுமி, நிர்மலா, செல்வி பங்கேற்றனர்.