/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆங்கில வழி கல்வி துவக்கம்
/
அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆங்கில வழி கல்வி துவக்கம்
அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆங்கில வழி கல்வி துவக்கம்
அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆங்கில வழி கல்வி துவக்கம்
ADDED : ஜூன் 04, 2024 05:34 AM
விக்கிரவாண்டி, : விக்கிரவாண்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் 'தினமலர்' நாளிதழ் செய்தி எதிரொலி காரணமாக ஆங்கில வழிக் கல்வி துவங்கியது.
விக்கிரவாண்டியில் தொடக்கப் பள்ளி, நடுநிலைப் பள்ளி, அரசு மகளிர் உயர்நிலைப் பள்ளி, அரசு மேல்நிலைப் பள்ளி உள்ளன.
இதில் நடுநிலைப் பள்ளி, மகளிர் உயர்நிலைப் பள்ளிகளில் மாணவர்களுக்கு ஆங்கில வழி கல்வி கற்பிக்கப்படுகிறது.
அரசு மேல்நிலைப் பள்ளியில் விக்கிரவாண்டி மற்றும் சுற்றுப்புற கிராமங்களைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் ஆறாம் வகுப்பு முதல் பிளஸ் டூ வரை 525 பேர் படித்து வருகின்றனர்.
இங்கே தமிழ் வழிக் கல்வி மட்டுமே கற்பிக்கப்படுகிறது.
இதனால் மாணவர்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகினர்.
இது பற்றி கடந்த கல்வியாண்டில் பள்ளியில் ஆங்கில வழியில் கல்வியை துவக்க வேண்டும் என 'தினமலர்' நாளிதழில் செய்தி வெளியிட்டது.
அதனைத் தொடர்ந்து, முன்னாள் மாணவர்கள், பெற்றோர் ஆசிரியர் கழகத்தினர் அரசின் பள்ளிகல்வித் துறைக்கு கோரிக்கை மனுக்களை அனுப்பினர்.
அதன்பேரில், நடப்பு 2024 - 25ம் கல்வி ஆண்டில் 9ம் வகுப்பு முதல் ஆங்கில வழி கல்வி துவக்க பள்ளி கல்வித்துறை அனுமதி வழங்கியுள்ளது.
பள்ளி தலைமை ஆசிரியர், பெற்றோர் ஆசிரியர் கழகம் மற்றும் முன்னாள் மாணவர்கள் சார்பில் பொதுமக்கள் மத்தியில் ஆங்கில வழிக் கல்வியில் பிள்ளைகளை சேர்க்க வலியுறுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
ஆங்கில வழிக் கல்விக்காக இப்பகுதியிலுள்ள பெற்றோர்கள் தனியார் பள்ளியில் கட்டணம் செலுத்தி தங்களது பிள்ளைகளை சேர்த்த நிலையில் தற்போது அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆங்கில வழி கல்வியை துவக்கியது வரவேற்பை பெற்றுள்ளது.