/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
எச்.சி.எல்., நிறுவனத்தில் பணிபுரிய ஆதிதிராவிடர்களுக்கு அழைப்பு
/
எச்.சி.எல்., நிறுவனத்தில் பணிபுரிய ஆதிதிராவிடர்களுக்கு அழைப்பு
எச்.சி.எல்., நிறுவனத்தில் பணிபுரிய ஆதிதிராவிடர்களுக்கு அழைப்பு
எச்.சி.எல்., நிறுவனத்தில் பணிபுரிய ஆதிதிராவிடர்களுக்கு அழைப்பு
ADDED : ஆக 12, 2024 06:14 AM
விழுப்புரம்: தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டு கழகம் (தாட்கோ) மூலம் பிளஸ் 2 தேர்ச்சி பெற்ற ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தைச் சேர்ந்தவர்கள் எச்.சி.எல்., நிறுவனத்தில் வேலை வாய்ப்போடு கூடிய பட்டப்படிப்பு பயில விண்ணப்பிக்கலாம்.
கலெக்டர் பழனி செய்திக்குறிப்பு:
எச்.சி.எல்., மூலம் பிளஸ் 2 முடித்த ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தைச் சேர்ந்தவர்கள் சிறு வயதில் தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் பணி துவங்க வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. எச்.சி.எல்., டெக்னாலஜிஸ் நிறுவனத்தில் ஓராண்டு கால பயிற்சி வழங்கப்படுகிறது.
மேலும், நிரந்தர வேலைவாய்ப்போடு ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள தனியார் கல்லுாரியில் பி.எஸ்சி., (கணினி டிசைனிங்) பட்டப்படிப்பு, தஞ்சை மாவட்டத்தில் உள்ள சாஸ்தரா பல்கலையில் பி.சி.ஏ., பட்டப்படிப்பு, அமிட்டி பல்கலையில் பி.சி.ஏ., - பி.பி.ஏ., - பி.காம்., நாக்பூரில் உள்ள ஐ.ஐ.எம்., பல்கலையில் இன்டகிரேடட் மேனேஜ்மென்ட் பட்டப்படிப்புகளில் சேர்ந்து பயிலவும், வாய்ப்பு பெற்று தரப்படுகிறது.
இதற்கு, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்பில் 2022-23ம் ஆண்டில் மொத்த மதிப்பெண்ணில் 60 சதவீதம், 2023-24ம் ஆண்டில் மொத்த மதிப்பெண்ணில் 75 சதவீதம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
குடும்ப வருமானம் ஆண்டிற்கு 3 லட்சம் ரூபாய்க்குள் இருக்க வேண்டும். எச்.சி.எல்., மூலம் நடத்தப்படும் நுழைவு தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இந்த நுழைவு தேர்வுக்கான பயிற்சி தாட்கோ மூலம் வழங்கப்படும். ஓராண்டு பயிற்சிக்கான செலவினம் தாட்கோ மூலம் ஏற்கப்படுகிறது.
ஆரம்ப கால மாத ஊதியம் 17,000 முதல் 22,000 ரூபாய் வரை பெறலாம். பின் திறமைக்கு ஏற்றபடி 50,000 முதல் 70,000 ரூபாய் வரை பதவி உயர்வு அடிப்படையில் மாத ஊதியமாக பெறலாம். இந்த திட்டத்தில் பதிய தாட்கோ இணையதளம் www.tahdco.com என்ற முகவரியில் பதிவு செய்ய வேண்டும்.
இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.